Feb 7, 2012

முருகனின் 12 கரங்களின் பணிகள்!

                               







      
முதல் கை - தேவர், முனிவர்களைப் பாதுகாக்கிறது

இரண்டாம் கை - முதல் கை செய்யும் பணிக்கு ஒத்தாசை செய்கிறது

மூன்றாம் கை - உலகத்தை தன் கைக்குள் அடக்குகிறது


நான்காம் கை - தேவையற்ற ஆசைகளைக் களைகிறது


ஐந்தாம் கை - நிறைந்த அருளைத் தருகிறது


ஆறாம் கை - வேல் கொண்டு பக்தர்களைப் பாதுகாக்கிறது


ஏழாம் கை - சரவணபவ என்னும் சொல்லுக்குரிய பொருளை முனிவர்கள் போன்ற தவப்புதல்வர்களுக்கு மட்டுமே வெளிப்படுத்தும் வகையில் மார்பில் உள்ளது


எட்டாம் கை - மார்பில் இருந்து தொங்கும் மாலையைத் தாங்குகிறது
ஒன்பதாம் கை - யாகபலனை ஏற்கிறது


பத்தாம் கை - இதுவும் யாகபலனை ஏற்கிறது


11ம் கை - மழை தருகிறது


12ம் கை - வள்ளி, தெய்வானைக்கு மாலை சூட்டுகிறது


இருவருக்கும் பிறந்த பிள்ளை: முருகன் தாயின் மூலமாக பிறக்காமல், தந்தை ஒருவரால் மட்டுமே பிறந்தவர் என்று எண்ணுகிறோம். இது சரியானதல்ல. அசுரன் ஒருவன் சிவனிடம், தான் யார் தலையில் கை வைத்தாலும் அவர்கள் அழிந்துவிட வேண்டும் என வித்தியாசமான வரத்தை பெற்றிருந்தான். அவன், சிவனது தலை மேலேயே கை வைக்க வந்தான். அவர் மறைந்து கொண்டார். பின்னர் அவன் பார்வதிதேவியின் தலை மீது கை வைக்க ஓடினான். அவள் சரவணப் பொய்கை தீர்த்தமாக மாறிவிட்டாள். சிவன் தன் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு பொறிகளை உண்டாக்கி சரவணப் பொய்கையில் இட்டார். அதிலிருந்து முருகன் அவதரித்தார். இதன் மூலம் முருகன் தன் தந்தை, தாயிடமிருந்து தோன்றினார் என்பது புலனாகிறது. இதனால் முருகனை சிவசக்திபாலன் என்றும் அழைப்பார்.

அறுபடை வீடுகளை அறிவிக்கும் நூல்: திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, சுவாமிமலை, திருத்தணி, சோலைமலை என்னும் ஆறுதலங்களும் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகள் ஆகும். மனிதனின் உடலில் ஆறு ஆதாரங்களாக மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை ஆகியவை இருப்பது போல, முருகனின் இப்படை வீடுகள் திகழ்கின்றன. முருகப்பெருமானின் வாழ்க்கை வரலாற்றினை இந்த ஆறுதலங்களில் அடக்கிச் சொல்வர். திருமுருகாற்றுப்படை என்னும் பழந்தமிழ் இலக்கியம் இந்த ஆறுபடை வீடுகளின் சிறப்பை மிக விரிவாகக் கூறுகிறது.

திருஆவினன்குடி சிறப்பு: குழந்தை வேலாயுதரை, மகாலட்சுமி (திரு), கோமாதா (ஆ), இனன் (சூரியன்), கு (பூமாதேவி), அக்னி (டி) ஆகியோர் வழிபட்டதால் இத்தலம், திருஆவினன்குடி என்று பெயர் பெற்றது. இவர்களுக்கு இக்கோயில் பிரகாரத்தில் சிலை இருக்கிறது. அருணகிரியார் இவரை வணங்கி, திருப்புகழ் பாடவே முருகன் காட்சி தந்ததோடு, ஜபமாலையும் கொடுத்தார். இதனை அருணகிரியார் திருப்புகழில் குறிப்பிட்டு பாடியுள்ளார். பழநிமலையின் வடபுறத்தில் பிரம்ம தீர்த்தம் இருக்கிறது. இந்த தீர்த்தக்கரையில் சிவன், அம்பிகையுடன் ரிஷப வாகனத்தின் மீதும், திருமால் கருடன் மீதும், பிரம்மா அன்னத்தின்மீதும் காட்சி தருகின்றனர். மூவரும் மேற்கு நோக்கியிருப்பது சிறப்பம்சம். இத்தீர்த்த நீரை தெளித்துக் கொண்டு மும்மூர்த்திகளையும் வழிபட்டால் பாவம் நீங்கும் என்பது நம்பிக்கை. பழநிக்கு வரும் பெண்கள், மலை பாதையிலுள்ள வள்ளிசுனையிலுள்ள வில்வமரத்தில் திருமாங்கல்யக் கயிறு கட்டி வேண்டிக் கொள்கின்றனர். இங்கு முருகன், வள்ளி திருமண கோலத்தில் காட்சி தருகின்றனர். வில்வமரத்தின் அடியில் வள்ளி தனியாகவும் காட்சி தருகிறாள்.

மூன்றாம் படைவீடு: பழநிமலை அடிவாரத்திலுள்ள திருஆவினன்குடி தலமே மூன்றாம் படை வீடு ஆகும். இங்கு முருகன் மயில் மீது அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். முருகன் குழந்தை வடிவமாக இருப்பதால், வள்ளி, தெய்வானை இல்லை. இவர் சிவனின் அம்சம் என்பதால், கருவறை சுற்றுச்சுவரில் (கோஷ்டம்) தட்சிணாமூர்த்தி, பிரகாரத்தில் பைரவர், சண்டிகேஸ்வரர் இருக்கின்றனர். பழநிக்கு செல்பவர்கள் முதலில் இங்குள்ள பெரியாவுடையாரைத் தரிசித்துவிட்டு, பின்பு பெரியநாயகியையும், அடுத்து மலையடிவாரத்தில் இருக்கும் திருவாவினன்குடி குழந்தை வேலாயுதரையும் வணங்க வேண்டும். அதன்பின்பே மலைக்கோயிலில் தண்டாயுதபாணியை வணங்க வேண்டும் என்பது ஐதீகம். பெரியநாயகி அம்மன் கோயிலில் தான் தைப்பூசக்கொடியேற்றமே நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பூசத்தன்று தேரோட்டமும் இந்த கோயிலின் ரதவீதிகளில் தான் நடக்கும். இக்கோயிலில் உள்ள உற்சவர் முத்துக்குமார சுவாமி( முருகன்) தைப்பூச விழா நாட்களில் வீதியுலா வருவார்.

வேலாயுதருக்கு அன்னாபிஷேகம்: பழநியில் முருகப்பெருமானை மூன்று கோலங்களில் தரிசிக்கலாம். பெரியநாயகி கோயிலில் மயில் வாகனம் இல்லாமல் வள்ளி, தெய்வானையுடன் திருமணக்கோலத்திலும், திருஆவினன்குடியில் மயில் மீது அமர்ந்து குழந்தை வடிவிலும், மலைக்கோயிலில் கையில் தண்டத்துடன் ஆண்டியாகவும் காட்சி தருகிறார். ஒரே தலத்தில் இவ்வாறு முருகனின் மூன்று கோலங்களையும் தரிசிப்பது அபூர்வம். ஐப்பசி பவுர்ணமியன்று, சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம் செய்யப்படும். பழநியில் முருகனுக்கு அன்னாபிஷேகம் உண்டு. ஆனி கேட்டை நட்சத்திரத்தில் மலைக்கோயிலில் அருளும் தண்டாயுதபாணிக்கு உச்சிக்காலத்திலும், ஆனி மூல நட்சத்திரத்தில் திருஆவினன்குடி குழந்தை வேலாயுதருக்கு சாயரட்சை பூஜையின்போதும் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.

தம்பியைக் காத்த அண்ணன்: சிறுவன் வடிவிலிருந்த முருகனிடம், இடும்பன் சண்டையிட முயன்றபோது, விநாயகர் அவரைக் காக்க வந்தார். ஆனாலும், முருகனுக்கு கிடைக்க வேண்டிய பழத்தை தான் பெற்றுக் கொண்டதால், தன் மீது அவருக்கு கோபம் இருக்கும் என்பதால், சுயவடிவத்தை மறைத்து நாகவடிவில், இடும்பனுடன் சண்டையிட்டார்.  இந்த விநாயகர் மலைக்கோயில் செல்லும் வழியில், இடும்பன் சந்நிதி அருகில் சர்ப்பத்தின் மீது காட்சி தருகிறார். தன் வலது காலை நாகத்தின் தலை மீது வைத்துள்ளார். சர்ப்பவிநாயகர் என்று இவரை அழைக்கிறார்கள். மலைக்கோயில் அடிவாரத்தில் பாதவிநாயகர் இருக்கிறார். மலையேறும் முன்பாக இவரை வணங்கிச் செல்ல வேண்டும் என்பது ஐதீகம். விநாயகருக்கு பின்புறம் முருகனின் பாதம் இருக்கிறது. இவ்விரு விநாயகர்களின் தரிசனமும் இங்கு விசேஷம்.


தைப்பூசம்





தைப்பூச நன்னாளில் முருகப் பெருமானை வழிபட்டு வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெறுங்கள்!


ஆனைமுகனுக்குத் தம்பியாய் வந்த ஆறுமுகனே! சிவசுப்பிரமணியனே! ஒளிமிகுந்த பன்னிரு தோள்களைக் கொண்டவனே! பன்னிருகைப் பரமனே! வெற்றி வேலாயுத மூர்த்தியே! செவ்வேள் முருகனே! திருமாலின் மருகனே! குழந்தைக் கடவுளே! எனக்கு மனநலத்தையும், உடல் நலத்தையும் தந்தருள வேண்டுகிறேன்.


* அம்மையப்பர் ஈன்றெடுத்த அருந்தவப்புதல்வா! தேன்சிந்தும் புது மலர்களை விரும்பி அணிபவனே! திருத்தணி முருகனே! கந்தனே! கடம்பனே! கார்த்திகேயனே! சூரபத்மனுக்கு வாழ்வு தந்த வள்ளலே! வெற்றிவீரனே! வள்ளிக்கு வாய்த்தவனே! வாழ்வில் தடைகளைப் போக்கி நல்வழி காட்டுவாயாக. 

* குயிலைப் போல இனிய மொழி பேசும் தெய்வானை மணாளனே! வள்ளிநாயகியை காதல் மணம் செய்தவனே! கருணை சிந்தும் விழிகளைக் கொண்டவனே! வடிவேலனே! விரைவில் என் குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த அருள்புரிவாயாக.

* மலைக்கு நாயகனே! மயிலேறிய மாணிக்கமே! சேவற்கொடியோனே! சிவசக்தி மைந்தனே! நம்பியவரைக் கரை சேர்ப்பவனே! காங்கேயனே! அறுபடைவீடுகளில் வீற்றிருந்து அருளாட்சி புரிபவனே! இன்னல்களைப் போக்கி வாழ்வில் நிம்மதியும், மகிழ்ச்சியும் நீயே தர வேண்டும். 

* உலகம் அனைத்தையும் ஆள்பவனே! நல்லவர்க்கு அருள்பவனே! வெற்றி வேலைக் கையில் ஏந்தியவனே! குற்றம் பொறுக்கும் குணக்குன்றே! சிவகுருநாதனே! எட்டுத்திக்கிலும் அருளாட்சி புரிபவனே! சரவணனே! சேவற்கொடியோனே! என் வசந்தத்தை வரவழைக்கும்படி சேவலைக் கூவச் செய்வாயாக. 

* தாமரைத் திருவடிகளைக் கொண்டவனே! வேதம் புகழும் உமைபாலனே! குறிஞ்சியின் முதல்வனே! துன்பமெல்லாம் போக்கி, ஆறுதலைத் தந்தருளும் ஆறுமுகப் பெருமானே! பிரணவத்திற்குப் பொருள் உரைத்த குருநாதனே! நீயே எனக்கு ஞானத்தை வழங்கி அருளவேண்டும்.

* தண்டாயுதபாணியே! சிங்கார வேலனே! ஒருமையுடன் தியானிக்கும் பக்தர்கள் உள்ளத்தில் வீற்றிருக்கும் குகப்பெருமானே! கிரவுஞ்சகிரியை இருகூறாகப் பிளந்த வேலவனே! அகத்தியருக்கு உபதேசித்த என் ஆண்டவனே! எனக்கு நல்லறிவையும், மதிநுட்பத்தையும் கொடுப்பாயாக.

* வேதத்தின் உட்பொருளே! அழகில் மன்மதனை வென்றவனே! பேரழகனே! தெய்வசிகாமணியே! குன்றுதோறும் வீற்றிருக்கும் குமரப்பெருமானே! தந்தைக்கு பாடம் சொன்ன தனயனே! சரவணப்பொய்கையில் உதித்தவனே! அவ்வைக்கு கனி ஈந்த சிவபாலனே! திருச்செந்தில் ஆண்டவனே! என் மன விருப்பங்களை நிறைவேற்றி வைப்பாயாக. 

* சண்முகப்பெருமானே! நான் மட்டுமல்லாமல், என்னைச் சேர்ந்தவர்களான மனைவி, பிள்ளைகள், உறவினர், நண்பர்கள் என்று அனைவரையும் உன் அன்பர்களாக வாழச் செய்வாயாக. உன்னருளால் எங்கள் உள்ளங்களிலும் இல்லங்களிலும் என்றும் மகிழ்ச்சி நிலைத்திருக்கட்டும்.

முருகன் பாடல்கள்

தைப்பூசத்தன்று முருகப்பெருமானைப் புகழ்ந்து, இந்தப் பாடல்களைப் பக்தியுடன் பாடி வளம் பல பெறுங்கள்.

அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சேல் என வேல்தோன்றும்- நெஞ்சில் 
ஒருகால் நினைக்கில் இருகாலும் தோன்றும்
முருகாஎன்று ஓதுவார் முன்.


வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட
தீரவேல் செவ்வேள் திருக்கை வேல்- வாரி
குளித்த வேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும்
தொளைத்த வேலுண்டே துணை.


விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மை குன்றா
மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள் முன்பு செய்த
பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும் பயந்த தனி
வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே.


சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்
வேந்தனைச் செந்தமிழ் நூல் விரித்தோனை விளங்கு வள்ளி
காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனை
சாந்துணைப் போதும் மறவாதவர்க்கு ஒரு தாழ்வில்லையே.


திருவடியும் தண்டையும் சிலம்பும் சிலம்பூருவப்
பொருவடி வேலும் கடம்பும் தடம்புயம் ஆறிரண்டும்
மருவடி வான வதனங்கள் ஆறும் மலர்க்கண்களும்
குரு வடிவாய் வந்து என் உள்ளம் குளிரக் குடிகொண்டவே.


கொள்ளித் தலையில் எறும்பது போலக் குலையுமென்றன்
உள்ளத் துயரை ஒழித்தருளாய் ஒருகோடி முத்தம்
தெள்ளிக் கொழிக்கும் கடற்செந்தில் மேவிய சேவகனே
வள்ளிக்கு வாய்த்தவனே மயிலேறிய மாணிக்கமே.


மொய்தார் அணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால்
வைதா ரையுமங்கு வாழ வைப்போன் வெய்ய வாரணம் போல்
கைதான் இருபது உடையான் தலைப்பத்தும் கத்தரிக்க 
எய்தான் மருகன் உமையாள் பயந்த இலஞ்சியமே.


காளைக் குமரேசன் எனக் கருதித்
தாளைப் பணியத் தவம் எய்தியவா
பாளைக் குழல் வள்ளி பதம் பணியும்
வேளைச் சுர பூபதி மேருவையே.


ஆறிரு தடந்தோள் வாழ்க! அறுமுகம் வாழ்க! வெற்பைக்
கூறுசெய் தனிவேல் வாழ்க! குக்குடம் வாழ்க! செவ்வேல்
ஏறிய மஞ்ஞை வாழ்க! யானை தன் அணங்கும் வாழ்க!
மாறிலா வள்ளி வாழ்க! வாழ்க சீர் அடியாரெல்லாம்!

Jan 27, 2012

ஸ்ரீ விநாயகர் வணக்கம்



திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும்- செஞ்சொற்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் உருவாக்கும்
ஆதலாற்  வானோரும்  ஆனைமுகத்தோனை
காதலாற் கூப்புவார்    தம்கை .                    
     

ஸ்தோத்திரம்

முஷிக வாகன மோதக ஹஸ்த சாமள கர்ண விளம்பித சூத்திர
வாமன ரூப மகேஸ்வர புத்ர விக்ன வினாயக பாத நமஸ்தே .


வினாயகர் ஓங்கார சொரூபமானவர். அவருக்கு செய்யும் வணக்கம் பிரம்மத்தையே சேருகிறது. வினாயகரை வணங்குதல் எல்லா தெய்வங்களையும் வணங்கியதற்கு ஒப்பாகும். பிடித்து வைத்தால் பிள்ளையார் என்று ஒரு வழக்கு மொழியும் கிராமப் புறங்களில் உள்ளது. அதாவது மஞ்சள் பொடி, பசும் சாணம் இதர சில பொருட்களினால் பிடித்து வைத்து பிள்ளையாரை ஆவாகணம் செய்து வழிபடலாம். மற்ற எல்லா வழிபாட்டிலும் மிக எளிமையாக வழிபடக் கூடியது வினாயகர் வழிபாடே.

வினாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
வினாயகனே வேட்கை தணிவிப்பான்
வினாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்
தன்மையினால் கண்ணில் பணிமின் கனிந்து


வினாயகர் அகவல் 

சீதக்களபச் செந்தாமரைப் பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாட
பொன்னரை ஞாணும் பூந்துகி லாடையும்
வண்ண மருங்கில் வளர்ந்தழ  கெறிப்பப்
பேழை வயிறும் பெரும் பாரக் கோடும்
வேழ முகமும் விளங்கு சிந்தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சில் குடி கொண்ட நீல மேனியும்

நான்ற வாயும் நாலிறு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்கு பொன்முடியும்
திரண்ட முப்புரி நூல் திகழொளி மார்பும்
சொற்பதங் கடந்த துரிய மெய்ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே...!
 முப்பழம் நுகரும் மூசிக வாகன
இப்பொழுதென்னை ஆட்கொள்ள வேண்டித்
தாயாய் எனக்குத் தானெழுந்தருளி
மாயப்பிறவி மயக்கம் அறுத்தே
திருந்திய முதல் ஐந்தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் னுளந் தன்னில் புகுந்து
குருவடிவாகிக் குவலயந்தன்னில்
திருவடி வைத்து திறமிது பொருளென
வாடா வகைதான் வந்தெனுக்  கருளி
கோடாயுதத்தால் கொடு வினை களைந்தே

உவட்டா உபதேசம் புகட்டி என் செவியில்
தெவிட்டா ஞானத் தெளிவையுங் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணை இனிது எனக்கருளிக்
கருவிகள் ஒடுங்கும் கருத்திணை அறிவித்து
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து
தலமொரு நான்கும் தந்தெனக்கு அருளி
மலமொரு மூன்றின மயக்கம் அறுத்தே

ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறுதாரத்  தங்குச நிலையும்
பேறா நிறுத்தி பேச்சுரை அறுத்தே
இடை பிங்கலையின் எழுத்தறிவித்து
கடையில் சுழுமுனை கபாலமும் காட்டி
மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவி லுணர்த்திக்

குண்டல யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலாதாரத்தின் மூண்டெழு கனலை
  நாவால்  எழுப்பும் கருத்தறிவித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக்கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடற் சக்கரத்தின் உறுப்பையும் காட்டி

சண்முக தூலமுஞ்  சதுர்முக சூட்சமும்
எண்முகமாக இனிதெனக்கு அருளிப்
புரியட்ட காயம் புலப்பட எனக்கு
தெரிஎட்டு நிலையும் தெரிசனப் படுத்தி
கருத்தினில் கபால வாயிற்  காட்டி
இருத்தி முத்தி இனிதெனக்கு அருளி
என்னை அறிவித்து எனக்கு அருள் செய்து
முன்னை வினையின் முதலைக் களைந்து

வாக்கும் மனமும் இல்லா மனோலயந்
தேக்கியே எந்தன் சிந்தை தெளிவித்து
இருள்வெளி  இரண்டிற்கும்  ஒன்று  இடமென 
அருள் தரும் ஆனந்தத்து அழுத்திஎன் செவியில்
எல்லையில்லா ஆனந்தம் அளித்து
அல்லல் களைந்தே அருள் வழிகாட்டிச் 
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச் 
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி

அனுவிற்  கணுவாய்  அப்பாலுக் கப்பாலாய் 
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமு  நீறும் விளங்க நிறுத்திக                         
கூடும் மெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறி  வித்துத்
தத்துவ நிலையை தந்து எனை யாண்ட
வித்தக வினாயக விரை கழல் சரணே...!


                                                                                                                                                                    வினாயகர் அகவல் தோன்றிய கதை:- 

                  சமய குரவர்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார் இப்பூவுலகிற்கு வந்த நோக்கம் முடிந்து கயிலாயத்திலிருந்து வந்த வெள்ளை யானையில் ஏறி  கயிலாயம் செல்லலானார். இதனையறிந்த சேரமான் பெருமாள் நாயனார் என்ற சுந்தரரின் உற்ற தோழர் தானும் சுந்தரருடன் கயிலை செல்ல விரும்பி தனது குதிரையில் ஏறி அதன் காதில் பஞ்சாட்சர மந்திரத்தை ஓதி சுந்தரரை பின்பற்றி அவருடன் கயிலாயம் செல்லலானார்.

             இவற்றையெல்லாம் தெரிந்து கொண்ட அவ்வையார் தானும் அவர்களுடன் கயிலாயம் செல்ல விரும்பினார். இதற்காக தான் செய்து கொண்டிருந்த வினாயகர் பூசையை அவசர அவசரமாக செய்யலானார். அப்பொழுது வினாயகர் பெருமான் நேரில் தோன்றி “ அவ்வையே ! நீ அவசரப்படாமல் எப்பொழுதும் போல் நிதானமாக உனது பூசைகளைச் செய். அவர்களிற்கு முன்னே உன்னை நான் கயிலாயத்திற்கு கொண்டு சென்று சேர்க்கிறன் ” என்று கூறினார். அவ்வையாரும் நிதானமாக பூசைகளைச் செய்து வினாயகர் அகவலையும் பாடினார். வினாயகரும் தான் கூறியபடி அவ்வையாரை தனது தும்பிக்கையினால் தூக்கி சுந்தரரிற்கும், சேரமானிற்கும் முன்பாக கயிலாயத்தில் சேர்ப்பித்தார்.
                              வினாயகர் அகவல் வினாயகப் பெருமானின் அழகையும் பெருமைகளையும் அற்புதமாக விளக்குவதுடன் யோக முறைகளில் ஒன்றான குண்டலிணி யோகம் பற்றியும் சிறப்பாக விளக்குகிறது.

எல்லாம் வல்ல வினாயகப் பெருமானை வழிபட்டு வாழ்வில் சகல வளமும் சகல நலமும் பெறுவோமாக!

ஸ்ரீஅம்பிகை அஷ்டோத்திர சத நாமாவளி




ஓம் சிவாயை  நம:  
     ஓம்  சிவசக்தியை  நம:
ஓம்   இச்சாசக்தியை   நம:
     ஓம்   க்ரியாசக்தியை  நம:
ஓம்   ஸ்வர்ண  ஸ்வரூபிண்யை  நம:
      ஓம்  ஜ்யோதிலஷ்மியை   நம:             

ஓம்    தீபலஷ்மியை   நம:
       ஓம்  மகாலஷ்மியை  நம:
ஓம்  தனலஷ்மியை  நம:
       ஓம்  தான்யலஷ்மியை  நம:  
ஓம்  தைர்யலஷ்மியை  நம:
       ஓம்  வீரலஷ்மியை  நம:                  

ஓம்  விஜயலஷ்மியை  நம:
      ஓம்  வித்யாலஷ்மியை  நம: 
ஓம்   ஜெயலஷ்மியை நம:
       ஓம்  வரலஷ்மியை   நம:
ஓம்   கஜலஷ்மியை  நம:
      ஓம்  காமவல்யை  நம:

ஓம்  காமாஷி  ஸுந்தர்யை  நம:
       ஓம்  சுபலஷ்மியை  நம:
ஓம்   ராஜலஷ்மியை நம:
       ஓம்  க்ருஹ லஷ்மியை  நம: 
ஓம்   ஸித்தலஷ்மியை   நம:
       ஓம்  ஸீதா லஷ்மியை  நம:

ஓம்  ஸர்வ மங்கள காரிண்யை  நம:
       ஓம்  ஸர்வ துக்க நிவாரிண்யை  நம:
ஓம்   ஸர்வாங்க  ஸுந்தர்யை  நம:
       ஓம்  சௌபாக்ய லஷ்மியை  நம:
ஓம்  ஆதிலஷ்மியை   நம:
      ஓம்  ஸந்தான லஷ்மியை  நம:

ஓம்  ஆனந்த  ஸ்வரூபிண்யை  நம:
       ஓம்  அகிலாண்ட  நாயிகாயை  நம:
ஓம்  பிரம்மாண்ட  நாயிகாயை  நம: 
      ஓம்   ஸுரப்யை  நம:
ஓம்   பரமாத்மிகாயை  நம:
        ஓம்  பத்மாலயாயை  நம:

ஓம்  பத்மாயை  நம:
      ஓம்  தன்யாயை  நம:
ஓம்  ஹிரண்மையை  நம:
      ஓம்  நித்ய புஷ்பாயை  நம:
ஓம்  தீப்தாயை  நம:
       ஓம்  வஸுதாயை  நம:

ஓம்  வஸுதாரிண்யை  நம:
      ஓம்  கமலாயை  நம:
ஓம்  காந்தாயை  நம:
       ஓம்   அனுக்ரஹ ப்ரதாயை   நம:
ஓம்  அனகாயை  நம:
       ஓம்  ஹரிவல்லபாயை  நம:

ஓம்   அசோகாயை   நம:
       ஓம்  அம்ருதாயை  நம:
ஓம்   துர்காயை   நம:
       ஓம்   நாராயண்யை  நம:
ஓம்  மங்கல்யாயை  நம:
       ஓம்  க்ருஷ்ணாயை  நம:

ஓம்  கன்யாகுமரியை  நம:
       ஓம் ப்ரசன்னாயை   நம:
ஓம்  கீர்த்யை   நம:
       ஓம்   ஸ்ரீயை   நம:
ஓம்   மோஹ நாசின்யை  நம:
        ஓம்  அபம் ருத்யு  நாசின்யை  நம:

ஓம்  வ்யாதி  நாசின்யை  நம:
       ஓம்  தாரித்ரிய  நாசின்யை  நம:
ஓம்  பய நாசின்யை  நம:
       ஓம்  சரண்யாயை  நம:
 ஓம்   ஆரோக்யதாயை  நம:
         ஓம்  சரஸ்வத்யை   நம:

ஓம்   மஹா மாயாயை  நம:
      ஓம்  புஸ்தஹ   ஹஸ்தாயை  நம:
ஓம்  ஞான முத்ராயை   நம:
       ஓம்   ராமாயை   நம:
ஓம்  விமலாயை  நம:
        ஓம்  வைஷ்ணவ்யை  நம:

ஓம்  சாவித்ர்யை   நம:
       ஓம்  வாக்தேவ்யை  நம:
ஓம்  பாரத்யை   நம:
       ஓம்  கோவிந்த  ரூபிண்யை  நம:
ஓம்  சுபத்ராயை   நம:
       ஓம்  திரிகுணாயை  நம:

ஓம்  அம்பிகாயை   நம:
        ஓம்  நிரஞ்ஜனாயை  நம:
ஓம்  நித்யாயை  நம:
       ஓம்  கோமத்யை  நம:
ஓம்   மஹா பாலாயை  நம:
       ஓம்  ஹம்ஸாஸனாயை  நம:

ஓம்  வேதமாத்ரே  நம:
        ஓம்  ஸாரதாயை  நம:
ஓம்  ஸ்ரீமாத்ரே   நம:
        ஓம்  சர்வாபரண  பூஷிதாயை  நம:
 ஓம்  மஹா சக்த்யை   நம:
        ஓம்   பவான்யை   நம:

 ஓம்   பக்திப்ரியாயை  நம:
        ஓம்  சாம்பவ்யை  நம:
 ஓம்  நிர்மலாயை   நம:
       ஓம்  சாந்தாயை   நம:
ஓம்   நித்ய முக்தாயை  நம:
       ஓம்   நிஷ் களங்காயை  நம:

ஓம்  பாபநாசின்யை  நம:
       ஓம்  பேதநாசின்யை  நம:
ஓம்  ஸுகப்ரதாயை   நம:
       ஓம்  சர்வேஸ்வரியை  நம:
ஓம் சர்வ மந்த்ர  ஸ்வரூபின்யை  நம:
       ஓம்   மனோன்மண்யை   நம:

ஓம்   மகேச்வர்யை   நம:
       ஓம் கல்யாண்யை நம:
ஓம்  ராஜ  ராஜேஷ்வர்யை   நம:
       ஓம்  பாலாயை  நம:
ஓம்   தர்மவர்த்தின்யை   நம:
      ஓம்  ஸ்ரீ  லலிதாம்பிகையை  நம:
 
ஸ்ரீஅம்பிகை   அஷ்டோத்திர  சத நாமாவளி  முற்றும்.

ஸ்ரீ மகாலட்சுமி 108 போற்றி




ஓம்  அன்புலட்சுமி  போற்றி
        ஓம்  அன்னலட்சுமி  போற்றி
ஓம்   அமிர்தலட்சுமி  போற்றி
       ஓம்    அம்சலட்சுமி   போற்றி
ஓம்   அருள்லட்சுமி   போற்றி
       ஓம்  அஷ்டலட்சுமி  போற்றி                  6

ஓம்   அழகுலட்சுமி    போற்றி
        ஓம்  ஆனந்தலட்சுமி   போற்றி
ஓம்  ஆகமலட்சுமி    போற்றி
       ஓம்   ஆதிலட்சுமி   போற்றி
ஓம்   ஆத்மலட்சுமி    போற்றி
        ஓம்  ஆளும்லட்சுமி  போற்றி               12

ஓம்  இஷ்டலட்சுமி   போற்றி
         ஓம்  இதயலட்சுமி   போற்றி
ஓம்  இன்பலட்சுமி    போற்றி
        ஓம்   ஈகைலட்சுமி   போற்றி
 ஓம்   உலகலட்சுமி   போற்றி
        ஓம்  உத்தமலட்சுமி   போற்றி               18

ஓம்  எளியலட்சுமி    போற்றி
        ஓம்  ஏகாந்தலட்சுமி   போற்றி
ஓம்   ஒளிலட்சுமி   போற்றி
        ஓம்  ஓங்காராலட்சுமி   போற்றி
ஓம்   கருணைலட்சுமி   போற்றி
       ஓம்  கனகலட்சுமி   போற்றி                   24

ஓம்   கஜலட்சுமி  போற்றி
        ஓம்   கானலட்சுமி   போற்றி 
ஓம்  கிரகலட்சுமி   போற்றி
        ஓம்   குணலட்சுமி    போற்றி
ஓம்   குங்குமலட்சுமி    போற்றி
        ஓம்   குடும்பலட்சுமி    போற்றி            30   

ஓம்   குளிர்லட்சுமி  போற்றி
         ஓம்  கம்பீரலட்சுமி   போற்றி
ஓம்   கேசவலட்சுமி    போற்றி
        ஓம்  கோவில் லட்சுமி   போற்றி
ஓம்   கோவிந்தலட்சுமி   போற்றி
        ஓம்   கோமாதாலட்சுமி   போற்றி        36
 
 ஓம்  சர்வலட்சுமி  போற்றி
         ஓம்  சக்திலட்சுமி போற்றி
 ஓம்   சக்ரலட்சுமி   போற்றி 
         ஓம் சத்தியலட்சுமி  போற்றி
  ஓம்   சங்குலட்சுமி   போற்றி
         ஓம்  சந்தானலட்சுமி   போற்றி            42

 ஓம்   சந்நிதிலட்சுமி   போற்றி
         ஓம்   சாந்தலட்சுமி    போற்றி
 ஓம்  சிங்காரலட்சுமி   போற்றி
         ஓம்  சீவலட்சுமி   போற்றி
ஓம்   சீதாலட்சுமி   போற்றி
         ஓம்   சுப்புலட்சுமி   போற்றி                  48

ஓம்  சுந்தரலட்சுமி   போற்றி
        ஓம்  சூர்யலட்சுமி   போற்றி
ஓம்   செல்வலட்சுமி   போற்றி
        ஓம்  செந்தாமரைலட்சுமி   போற்றி
ஓம்   சொர்ணலட்சுமி   போற்றி
        ஓம்   சொருபலட்சுமி    போற்றி            54

ஓம் சௌந்தர்யலட்சுமி போற்றி 
        ஓம்  ஞானலட்சுமி   போற்றி
 ஓம்   தங்கலட்சுமி  போற்றி
        ஓம்   தனலட்சுமி    போற்றி
  ஓம்   தான்யலட்சுமி   போற்றி
       ஓம்  திரிபுரலட்சுமி   போற்றி                  60

ஓம்  திருப்புகழ்லட்சுமி போற்றி 
        ஓம்   திலகலட்சுமி    போற்றி
 ஓம்   தீபலட்சுமி     போற்றி
        ஓம்   துளசிலட்சுமி   போற்றி
 ஓம்  துர்காலட்சுமி   போற்றி
         ஓம்  தூயலட்சுமி   போற்றி                  66

ஓம்  தெய்வலட்சுமி   போற்றி
        ஓம்  தேவலட்சுமி    போற்றி
ஓம்   தைரியலட்சுமி   போற்றி
       ஓம்   பங்கயலட்சுமி   போற்றி
ஓம்  பாக்யலட்சுமி   போற்றி
        ஓம்  பாற்கடல்லட்சுமி   போற்றி         72

ஓம்  புண்ணியலட்சுமி   போற்றி
        ஓம்  பொருள்லட்சுமி    போற்றி
ஓம்  பொன்னிறலட்சுமி   போற்றி
         ஓம்   போகலட்சுமி    போற்றி
ஓம்   மங்களலட்சுமி போற்றி 
        ஓம்  மகாலட்சுமி   போற்றி                  78

ஓம்   மாதவலட்சுமி   போற்றி
       ஓம்  மாதாலட்சுமி   போற்றி
ஓம்   மாங்கல்யலட்சுமி   போற்றி 
       ஓம்   மாசிலாலட்சுமி    போற்றி
ஓம்   முக்திலட்சுமி போற்றி
        ஓம்  முத்துலட்சுமி   போற்றி                84

ஓம்  மோகனலட்சுமி  போற்றி
        ஓம்  வரம்தரும்லட்சுமி   போற்றி
ஓம்  வரலட்சுமி   போற்றி
        ஓம்  வாழும்லட்சுமி   போற்றி
ஓம்   விளக்குலட்சுமி  போற்றி
       ஓம்  விஜயலட்சுமி   போற்றி                 90

ஓம்  விஷ்ணுலட்சுமி    போற்றி
       ஓம் வீட்டுலட்சுமி    போற்றி
ஓம்  வீரலட்சுமி    போற்றி           
        ஓம்  வெற்றிலட்சுமி   போற்றி
ஓம்   வேங்கடலட்சுமி     போற்றி
        ஓம்   வைரலட்சுமி   போற்றி                 96

ஓம்  வைகுண்டலட்சுமி   போற்றி
       ஓம்  நாராயணலட்சுமி   போற்றி
ஓம்   நாகலட்சுமி   போற்றி
        ஓம்   நித்தியலட்சுமி    போற்றி
ஓம்  நீங்காதலட்சுமி  போற்றி
        ஓம்  ராமலட்சுமி   போற்றி                    102

ஓம்   ராஜலட்சுமி   போற்றி
        ஓம் ஐஸ்வர்யலட்சுமி  போற்றி
ஓம்  ஜெயலட்சுமி  போற்றி
        ஓம்  ஜீவலட்சுமி  போற்றி
ஓம்  ஜோதிலட்சுமி   போற்றி
        ஓம்  ஸ்ரீலட்சுமி    போற்றி ...                  108

போற்றி ... போற்றி 
                போற்றி ... போற்றி 
                             போற்றி.... போற்றி 

கந்த குரு கவசம் பாகம் - 2


ஞான பண்டிதா நான்மறை வித்தகா கேள்
ஸ்கந்த குருநாதா ஸ்கந்த குருநாதா கேள்
மெய்ப்பொருளைக் காட்டி மேன்மை அடைந்திடச்செய்
வினைகள் யாவையுமே வேல்கொண்டு விரட்டிடுவாய்
தாரித்திரியங்களை உன் தடி கொண்டு விரட்டிடுவாய் ...... 245

துக்கங்கள் அனைத்தையும் தொலைதூரம் போக்கிடுவாய்
பாப உடலைப் பரிசுத்த மாக்கிடுவாய்
இன்ப துன்பத்தை இருவிழியால் விரட்டிடுவாய்
ஆசைப் பேய்களை அறவே நசுக்கிடுவாய்
அகந்தைப் பிசாசை அழித்து ஒழித்திடடா ...... 250

மெய்யருளாம் உன்னருளில் முருகா இருத்திடுவாய்
கண்கண்ட தெய்வமே கலியுக வரதனே
ஆறுமுகமான குரோ அறிந்திட்டேன் உன் மகிமை
இக்கணமே வருவாய் என் ஸ்கந்த குருவே நீ
என்னைக் காத்திடவே எனக்கு நீ அருளிடவே ...... 255

அரைக் கணத்தில் நீயும் ஆடி வருவாயப்பா
வந்தெனைத் தடுத்து வலிய ஆட்கொள் வரதகுரோ
அன்புத் தெய்வமே ஆறுமுக மானவனே
சுப்ரமண்யனே சோகம் அகற்றிடுவாய்
ஞான ஸ்கந்தரே ஞானம் அருள்வாய் நீ ...... 260

ஞான தண்ட பாணியே என்னை ஞான பண்டிதனாக்கிடுவாய்
அகந்தையெல்லாம் அழித்து அன்பினை ஊட்டிடுவாய்
அன்பு மயமாக்கி ஆட்கொள்ளு வையப்பா
அன்பை என் உள்ளத்தில் அசைவின்றி நிறுத்திவிடு
அன்பையே கண்ணாக ஆக்கிக் காத்திடுவாய் ...... 265

உள்ளும் புறமும் உன்னருளாம் அன்பையே
உறுதியாக நானும் பற்றிட உவந்திடுவாய்
எல்லை இல்லாத அன்பே இறைவெளி என்றாய் நீ
அங்கிங்கெனாதபடி எங்கும் அன்பென்றாய்
அன்பே சிவமும் அன்பே சக்தியும் ...... 270

அன்பே ஹரியும் அன்பே ப்ரமனும்
அன்பே தேவரும் அன்பே மனிதரும்
அன்பே நீயும் அன்பே நானும்
அன்பே சத்தியம் அன்பே நித்தியம்
அன்பே சாந்தம் அன்பே ஆனந்தம் ...... 275

அன்பே மெளனம் அன்பே மோக்ஷம்
அன்பே ப்ரம்மமும் அன்பே அனைத்தும் என்றாய்
அன்பிலாத இடம் அங்குமிங்கு மில்லை என்றாய்
எங்கும் நிறைந்த அன்பே என் குருநாதனப்பா
அன்பில் உறையும் அருட்குரு நாதரே தான் ...... 280

[எல்லாமே அன்புதான் என்பதை உணர்த்தும் அருமையான வரிகள்!அனைவரும் இதனை உணர்ந்தால், கேள்விகள்தான் ஏது?]


[ஸ்கந்தகிரியின் பெருமையும், அது இருக்கும் இடமும், அத்தலத்தைப் போற்றிடும் பெரியோரைப் பற்றியும் இங்கு சொல்லப்படுகிறது.]

ஸ்கந்தாஸ்ரமத்தில் ஸ்கந்தகுரு வானான்காண்
மூவரும் தேவரும் முனிவரும் போற்றிடவே
ஸ்கந்தாஸ்ரமம் தன்னில் ஸ்கந்த ஜோதியுமாய்
ஆத்ம ஜோதியுமாய் அமர்ந்திட்ட ஸ்கந்தகுரு
இருளை அகற்றவே எழுந்திட்ட எங்கள் குரு ...... 285

எல்லை இல்லாத உன் இறைவெளியைக் காட்டிடுவாய்
முக்தியைத் தந்திடுவாய் மூவரும் போற்றிடவே
நம்பினேன் உன்னையே நம்பினேன் ஸ்கந்தகுரோ
உன்னையன்றி இவ்வுலகில் ஒன்றுமில்லை என்றுணர்ந்தேன்
நன்கறிந்து கொண்டேன் நானும் உனதருளால் ...... 290

விட்டிட மாட்டேன் கந்தா வீட தருள்வீரே
நடுநெற்றித் தானத்து நானுனைத் தியானிப்பேன்
ப்ரம்மமந்திரத்தைப் போதித்து வந்திடுவாய்
சுழுமுனை மார்க்கமாய் ஜோதியை காட்டிடுவாய்
சிவயோகியாக எனைச் செய்திடும் குருநாதா ...... 295

ஆசை அறுத்து அரனடியைக் காட்டிவிடும்
மெய்யடி யராக்கி மெய் வீட்டில் இருத்திவிடும்
கொங்கு நாட்டிலே கோயில் கொண்ட ஸ்கந்தகுரோ
கொல்லிமலை மேலே குமரகுரு வானவனே
கஞ்சமலை சித்தர் போற்றும் ஸ்கந்தகிரி குருநாதா ...... 300

கருவூரார் போற்றும் காங்கேயா கந்தகுரோ
மருதமலைச் சித்தன் மகிழ்ந்துபணி பரமகுரோ
சென்னிமலைக் குமரா சித்தர்க்கு அருள்வோனே
சிவவாக்கியர் சித்தர் உனைச் சிவன் மலையில் போற்றுவரே
பழனியில் போகருமே பாரோர் வாழப் ப்ரதிஷ்டை செய்திட்டார்..305

புலிப்பாணி சித்தர்களால் புடை சூழ்ந்த குமரகுரோ
கொங்கில் மலிந்திட்ட ஸ்கந்த குருநாதா
கள்ளம் கபடமற்ற வெள்ளை உள்ளம் அருள்வீரே
கற்றவர்களோடு என்னைக் களிப்புறச் செய்திடுமே
உலகெங்கும் நிறைந்திருந்தும் கந்தகுரு உள்ளஇடம் ...... 310

ஸ்கந்தகிரி என்பதை தான் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
நால்வர் அருணகிரி நவமிரண்டு சித்தர்களும்
பக்தர்களும் போற்றும் பழநிமலை முருகா கேள்
கொங்குதேசத்தில் குன்றுதோறும் குடிகொண்டோய்
சீலம் நிறைந்த சேலம்மா நகரத்தில் ...... 315

கன்னிமார் ஓடையின்மேல் ஸ்கந்தகிரி அதனில்
ஸ்கந்தாஸ் ரமத்தினிலே ஞானஸ்கந்த சத்குருவாய்
அமர்ந்திருக்கும் ஜோதியே ஆதிமூல மானகுரோ
அயர்ச்சியை நீக்கிடுவாய் என் தளர்ச்சியை அகற்றிடுவாய்
சுகவனேசன் மகனே சுப்ரமண்ய ஜோதியே ...... 320

பேரின்ப மகிழ்ச்சியையும் பெருகிடச் செய்திடப்பா
பரமானந்தமதில் எனை மறக்க பாலிப்பாய்
மால் மருகா வள்ளி மணவாளா ஸ்கந்தகுரோ
சிவகுமரா உன்கோயில் ஸ்கந்தகிரி என்றுணர்ந்தேன்
ஜோதிப்பிழம்பான சுந்தரனே பழனியப்பா ...... 325

சிவஞானப் பழமான ஸ்கந்தகுருநாதா
பழம் நீ என்றதினால் பழனிமலை யிருந்தாயோ
திருவாவினன் குடியில் திருமுருகன் ஆனாயோ
குமரா முருகா குருகுகா வேலவனே
அகத்தியர்க்குத் தந்து ஆட்கொண்டாய் தமிழகத்தை ...... 330

கலியுக வரதனென்று கலசமுனி உனைப்புகழ்ந்தான்
ஒளவைக்கு அருள் செய்த அறுமுகவா ஸ்கந்தகுரோ
ஒழுக்கமொடு கருணையையும் தவத்தையும் தந்தருள்வாய்
போகருக்கருள் செய்த புவன சுந்தரனே
தண்டபாணித் தெய்வமே தடுத்தாட் கொண்டிடப்பா ...... 335

ஆண்டிக் கோலத்தில் அணைத்திடுவாய் தண்டுடனே
தெய்வங்கள் போற்றிடும் தண்டாயுத ஜோதியே
ஸ்கந்தகிரி மேலே ஸ்கந்தகிரி ஜோதி யானவனே
கடைக்கண்ணால் பார்த்திடப்பா கருணையுள்ள ஸ்கந்தகுரோ
ஏழையைக் காத்திடப்பா ஏத்துகிறேன் உன்நாமம் ...... 340

உன்னை அன்றி வேறொன்றை ஒருபோதும் நம்புகிலேன்
கண்கண்ட தெய்வமே கலியுக வரதனே
கந்தன் என்ற பேர்சொன்னால் கடிதாக நோய்தீரும்
புவனேஸ்வரி மைந்தா போற்றினேன் திருவடியை
திருவடியை நம்பினேன் திருவடி சாட்சியாக ...... 345

புவனமாதா மைந்தனே புண்ணிய மூர்த்தியே கேள்
நின் நாமம் ஏத்துவதே நான் செய்யும் தவமாகும்
நாத்தழும் பேறவே ஏத்திடுவேன் நின்நாமம்
முருகா முருகாவென்றே மூச்செல்லாம் விட்டிடுவேன்
உள்ளும் புறமும் ஒருமுருகனையே காண்பேன் ...... 350

அங்கிங்கு எனாதபடி எங்குமே முருகனப்பா
முருகன் இலாவிட்டால் மூவுலக மேதப்பா
அப்பப்பா முருகாநின் அருளே உலகமப்பா
அருளெல்லாம் முருகன் அன்பெல்லாம் முருகன்
ஸ்தாவர ஜங்கமாய் ஸ்கந்தனாய் அருவுருவாய் ...... 355

முருகனாய் முதல்வனாய் ஆனவன் ஸ்கந்தகுரு
ஸ்கந்தாஸ்ரமம் இருக்கும் ஸ்கந்தகுரு அடிபற்றிச்
சரணம் அடைந்தவர்கள் சாயுஜ்யம் பெற்றிடுவர்
சத்தியம் சொல்கின்றேன் சந்தேக மில்லையப்பா
வேதங்கள் போற்றிடும் வடிவேலன் முருகனை நீ ...... 360

சந்தேகம் இல்லாமல் சத்தியமாய் நம்பிடுவாய்
சத்திய மானதெய்வம் ஸ்கந்த குருநாதன்
சத்தியம் காணவே நீ சத்தியமாய் நம்பிடப்பா
சத்தியம் வேறல்ல ஸ்கந்தகுரு வேறல்ல
ஸ்கந்தகுருவே சத்தியம் சத்தியமே ஸ்கந்தகுரு ...... 365

சத்தியமாய்ச் சொன்னதை சத்தியமாய் நம்பியே நீ
சத்தியமாய் ஞானமாய் சதானந்த மாகிவிடு
அழிவற்ற ப்ரம்மமாய் ஆக்கி விடுவான் முருகன்
திருமறைகள் திருமுறைகள் செப்புவதும் இதுவேதான்
ஸ்கந்தகுரு கவசமதை சொந்தமாக்கிக் கொண்டு நீ ...... 370

பொருளுணர்ந்து ஏத்திடப்பா பொல்லாப்பு வினையகலும்
பிறவிப் பிணி அகலும் ப்ரம்மானந்த முண்டு
இம்மையிலும் மறுமையிலும் இமையருனைப் போற்றிடுவர்
மூவருமே முன்னிற்பர் யாவருமே பூஜிப்பர்
அனுதினமும் கவசத்தை அன்புடன் ஏத்திடப்பா ...... 375

சிரத்தா பக்தியுடன் சிந்தையொன்றிச் செப்பிடப்பா
கவலைய கன்றிடுமே கந்தனருள் பொங்கிடுமே
பிறப்பும் இறப்பும் பிணிகளும் தொலைந்திடுமே
கந்தன் கவசமே கவசமென்று உணர்ந்திடுவாய்
கவசம் ஏத்துவீரேல் கலியை ஜெயித்திடலாம் ...... 380

கலி என்ற அரக்கனைக் கவசம் விரட்டிடுமே
சொன்னபடிச் செய்து சுகமடைவாய் மனமே நீ
ஸ்கந்தகுரு கவசத்தைக் கருத்தூன்றி ஏத்துவோர்க்கு
அஷ்ட ஐஸ்வர்யம் தரும் அந்தமில்லா இன்பம் தரும்
ஆல்போல் தழைத்திடுவன் அறுகுபோல் வேரோடிடுவன் ...... 385

வாழையடி வாழையைப்போல் வம்சமதைப் பெற்றிடுவன்
பதினாறும் பெற்றுப் பல்லாண்டு வாழ்ந்திடுவன்
சாந்தியும் செளக்யமும் சர்வமங்களமும் பெருகிடுமே
ஸ்கந்தகுரு கவசமிதை கருத்திருத்தி ஏற்றுவீரேல்
கர்வம் காமக்குரோதம் கலிதோஷம் அகற்றுவிக்கும் ...... 390

முன்செய்த வினையகன்று முருகனருள் கிட்டிவிடும்
அறம் பொருள் இன்பம் வீடு அதிசுலபமாய்க் கிட்டும்
ஆசாரம் சீலமுடன் ஆதிநேம நிஷ்டையுடன்
கள்ளமிலா உள்ளத்தோடு கந்தகுரு கவசம் தன்னை
சிரத்தா பக்தியுடன் சிவகுமரனை நினைத்துப் ...... 395

பாராயணம் செய்வீரேல் பார்க்கலாம் கந்தனையும்
கந்தகுரு கவசமிதை மண்டலம் நிஷ்டையுடன்
பகலிரவு பாராமல் ஒருமனதாய் பகருவீரேல்
திருமுருகன் வேல்கொண்டு திக்குகள் தோறும் நின்று
காத்திடுவான் கந்தகுரு கவலை இல்லை நிச்சயமாய் ...... 400

ஞான ஸ்கந்தனின் திருவடியை நம்பியே நீ
கந்தகுரு கவசம் தன்னை ஓதுவதே தவம் எனவே
உணர்ந்துகொண்டு ஓதுவையேல் உனக்குப் பெரிதான
இகபரசுகம் உண்டாம் எந்நாளும் துன்பம் இல்லை
துன்பம் அகன்று விடும் தொந்திரைகள் நீங்கிவிடும் ...... 405

இன்பம் பெருகிவிடும் இஷ்டசித்தி கூடிவிடும்
பிறவிப்பிணி அகற்றி ப்ரம்ம நிஷ்டையும் தந்து
காத்து ரக்ஷிக்கும் கந்தகுரு கவசமுமே
கவலையை விட்டுநீ கந்தகுரு கவசமிதை
இருந்த படியிருந்து ஏற்றிவிடு ஏற்றினால் ...... 410

தெய்வங்கள் தேவர்கள் சித்தர்கள் பக்தர்கள்
போற்றிடுவர் ஏவலுமே புரிந்திடுவர் நிச்சயமாய்
ஸ்கந்தகுரு கவசம் சம்சயப் பேயோட்டும்
அஞ்ஞானமும் அகற்றி அருள் ஒளியும் காட்டும்
ஞான ஸ்கந்தகுரு நானென்றும் முன்நிற்பன் ...... 415

உள்ளொளியாய் இருந்து உன்னில் அவனாக்கிடுவன்
தன்னில் உனைக்காட்டி உன்னில் தனைக்காட்டி
எங்கும் தனைக்காட்டி எங்குமுனைக் காட்டிடுவான்
ஸ்கந்தஜோதி யானகந்தன் கந்தகிரி இருந்து
தண்டாயுதம் தாங்கித் தருகின்றான் காட்சியுமே ...... 420

கந்தன் புகழ் பாடக் கந்தகிரி வாருமினே
கந்தகிரி வந்து நிதம் கண்டுய்ம்மின் ஜகத்தீரே
கலிதோஷம் அகற்றுவிக்கும் கந்தகுரு கவசமிதை
பாராயணம் செய்து பாரில் புகழ் பெறுமின்
ஸ்கந்தகுரு கவச பலன் பற்றறுத்துப் பரம்கொடுக்கும் ...... 425

ஒருதரம் கவசம் ஓதின் உள்ளழுக்குப் போகும்
இருதரம் ஏற்றுவீரேல் எண்ணியதெல்லாம் கிட்டும்
மூன்றுதரம் ஓதின் முன்னிற்பன் ஸ்கந்தகுரு
நான்குமுறை ஓதி தினம் நல்லவரம் பெறுவீர்
ஐந்துமுறை தினமோதி பஞ்சாட்சரம் பெற்று ...... 430

ஆறுமுறை யோதி ஆறுதலைப் பெற்றிடுவீர்
ஏழு முறை தினம் ஓதின் எல்லாம் வசமாகும்
எட்டுமுறை ஏத்தில் அட்டமா சித்திகிட்டும்
ஒன்பதுதரம் ஓதின் மரணபயம் ஒழியும்
பத்துதரம் ஓதி நித்தம் பற்றறுத்து வாழ்வீரே ...... 435

கன்னிமார் ஓடையிலே நீராடி நீறுபூசிக்
கந்தகுரு கவசம் ஓதி கந்தகிரி ஏறிவிட்டால்
முந்தை வினை எல்லாம் கந்தன் அகற்றிடுவான்
நிந்தைகள் நீங்கிவிடும் நிஷ்டையுமே கைகூடும்
கன்னிமார் ஓடை நீரை கைகளில் நீ எடுத்துக் ...... 440

கந்தன் என்ற மந்திரத்தைக் கண்மூடி உருவேற்றி
உச்சியிலும் தெளித்து உட்கொண்டு விட்டிட்டால் உன்
சித்த மலம் அகன்று சித்த சுத்தியும் கொடுக்கும்
கன்னிமார் தேவிகளைக் கன்னிமார் ஓடையிலே
கண்டு வழிபட்டு கந்தகிரி ஏறிடுவீர் ...... 445

கந்தகிரி ஏறி ஞான ஸ்கந்தகுரு கவசமிதைப்
பாராயணம் செய்துலகில் பாக்கியமெல்லாம் பெற்றுடுவீர்..... 447

ஸ்ரீ கந்த குரு கவசம் முற்றிற்று.


இந்தப் புனித கவசத்தை இங்கு அளிக்க அருள் புரிந்த ஸ்ரீ சாந்தானந்த ஸ்வாமிகளுக்கும், இதனைத் தொடர்ந்து படித்து வந்த அனைவருக்கும் எனது நன்றி!

கந்த குரு கவசம்




கந்த குரு கவசம் பாகம் - 1


ஸ்ரீமத் சத்குரு சாந்தானந்த சுவாமிகள்
அருளிய கந்த குரு கவசம்.

.. விநாயகர் வாழ்த்து ...

கலியுகத் தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே
மூஷிக வாகனனே மூலப் பொருளோனே
ஸ்கந்தகுரு கவசத்தை கலிதோஷம் நீங்கிடவே
திருவடியின் திருவருளால் செப்புகிறேன் காத்தருள்வாய்
சித்தி வினாயக ஜயமருள் போற்றுகிறேன் ...... 5

சிற்பர கணபதே நற்கதியும் தந்தருள்வாய்
கணபதி தாளிணையைக் கருத்தினில் வைத்திட்டேன்
அச்சம் தீர்த்து என்னை ரக்ஷித்திடுவீரே.

... செய்யுள் ...

ஸ்கந்தா சரணம் ஸ்கந்தா சரணம்
சரவணபவ குகா சரணம் சரணம் ...... 10

குருகுகா சரணம் குருபரா சரணம்
சரணம் அடைந்திட்டேன் கந்தா சரணம்
தனைத் தானறிந்து நான் தன்மயமாகிடவே
ஸ்கந்தகிரி குருநாதா தந்திடுவீர் ஞானமுமே
தத்தகிரி குருநாதா வந்திடுவீர் வந்திடுவீர் ...... 15

அவதூத சத்குருவாய் ஆண்டவனே வந்திடுவீர்
அன்புருவாய் வந்தென்னை ஆட்கொண்ட குருபரனே
அறம் பொருள் இன்பம் வீடுமே தந்தருள்வாய்
தந்திடுவாய் வரமதனை ஸ்கந்தகுருநாதா
ஷண்முகா சரணம் சரணம் ஸ்கந்த குரோ ...... 20

காத்திடுவாய் காத்திடுவாய் ஸ்கந்தகுரு நாதா
போற்றிடுவேன் போற்றிடுவேன் புவனகுரு நாதா
போற்றி போற்றி ஸ்கந்தா போற்றி
போற்றி போற்றி முருகா போற்றி
அறுமுகா போற்றி அருட்பதம் அருள்வாய் ...... 25

தகப்பன் ஸ்வாமியே என் இதயத்துள் தங்கிடுவாய்
ஸ்வாமி மலைதனில் சொன்னதனைச் சொல்லிடுவாய்
சிவகுரு நாதா செப்பிடுவாய் ப்ரணவமதை
அகக்கண் திறக்க அருள்வாய் உபதேசம்
திக்கெலாம் வென்று திருச்செந்தில் அமர்ந்தோனே ...... 30

ஆறுமுக ஸ்வாமி உன்னை அருட்ஜோதியாய்க் காண
அகத்துள்ளே குமரா நீ அன்பு மயமாய் வருவாய்
அமரத் தன்மையினை அனுக்கிரகித்திடுவாயே
வேலுடைக் குமரா நீ வித்தையும் தந்தருள்வாய்
வேல் கொண்டு வந்திடுவாய் காலனை விரட்டிடவே ...... 35

தேவரைக் காத்த திருச்செந்தில் ஆண்டவனே
திருமுருகன் பூண்டியிலே திவ்ய ஜோதியான கந்தா
பரஞ் ஜோதியும் காட்டி பரிபூர்ணமாக்கிடுவாய்
திருமலை முருகா நீ திடஞானம் அருள் புரிவாய்
செல்வமுத்துக் குமரா மும்மலம் அகற்றிடுவாய் ...... 40


[ஸ்கந்தகிரிக் குமரனை அழைக்கையில், அப்படியே அடுத்தடுத்து, அனைத்துக் கோயில்களிலும் குடிகொண்டிருக்கும் குமரனையெல்லாம் கூடவே கூப்பிட்டு அழைக்கிறார்.]

அடிமுடி யறியவொணா அண்ணா மலையோனே
அருணாசலக் குமரா அருணகிரிக்கு அருளியவா
திருப்பரங்கிரிக் குகனே தீர்த்திடுவாய் வினை முழுதும்
திருத்தணி வேல்முருகா தீரனாய் ஆக்கிடுவாய்
எட்டுக்குடிக் குமரா ஏவல்பில்லி சூனியத்தை ...... 45

பகைவர் சூதுவாதுகளை வேல்கொண்டு விரட்டிடுவாய்
எல்லாப் பயன்களும் எனக்குக் கிடைத்திடவே
எங்கும் நிறைந்த கந்தா எண்கண் முருகா நீ
என்னுள் அறிவாய் நீ உள்ளொளியாய் வந்தருள்வாய்
திருப்போருர் மாமுருகா திருவடியே சரணமய்யா ...... 50

அறிவொளியாய் வந்து நீ அகக்கண்ணைத் திறந்திடுவாய்
திருச்செந்தூர் ஷண்முகனே ஜகத்குருவிற் கருளியவா
ஜகத்குரோ சிவகுமரா சித்தமலம் அகற்றிடுவாய்
செங்கோட்டு வேலவனே சிவானுபூதி தாரும்
சிக்கல் சிங்காரா ஜீவனைச் சிவனாக்கிடுவாய் ...... 55

குன்றக்குடிக் குமரா குருகுகனாய் வந்திடப்பா
குமரகிரிப் பெருமானே மனத்தையும் மாய்த்திடுவீர்
பச்சைமலை முருகா இச்சையைக் களைந்திடப்பா
பவழமலை ஆண்டவனே பாவங்களைப் போக்கிடப்பா
விராலிமலை ஷண்முகனே விரைவில் நீ வந்திடப்பா ...... 60

வயலூர் குமாரகுரோ ஞானவரமெனக் கருள்வீரே
வெண்ணைமலை முருகா மெய்வீட்டைத் தந்திடுவீர்
கதிர்காம வேலவனே மனமாயை அகற்றிடுவாய்
காந்த மலைக் குமரா கருத்துள் வந்திடுவீர்
மயிலத்து முருகா நீ மனத்தகத்துள் வந்திடுவீர் ...... 65


கஞ்சமலை சித்தகுரோ கண்ணொளியாய் வந்திடுவீர்
குமரமலை குருநாதா கவலையெலாம் போக்கிடுவீர்
வள்ளிமலை வேல்முருகா வேல்கொண்டு வந்திடுவீர்
வடபழனி ஆண்டவனே வல்வினைகள் போக்கிடுவீர்
ஏழுமலை ஆண்டவனே எத்திக்கும் காத்திடுவீர் ...... 70

ஏழ்மை அகற்றிக் கந்தா எமபயம் போக்கிடுவீர்
அசையாத நெஞ்சத்தில் அறிவாக நீ அருள்வாய்
அறுபடைக் குமரா மயிலேறி வந்திடுவாய்
பணிவதே பணியென்று பணித்தனை நீ எனக்கு
பணிந்தேன் கந்தா உன்பாதம் பணிந்துவப்பேன் ...... 75

அருட்பெருஞ் ஜோதியே அன்பெனக் கருள்வாயே
படர்ந்த அன்பினை நீ பரப்பிரம்மம் என்றனையே
உலகெங்கும் உள்ளது ஒருபொருள் அன்பேதான்
உள்ளுயிராகி இருப்பதும் அன்பென்பாய்
அன்பே குமரன் அன்பே ஸ்கந்தன் ...... 80

அன்பே ஓம் என்னும் அருள்மந்திரம் என்றாய்
அன்பை உள்ளத்திலே அசையாது அமர்த்திடுமோர்
சக்தியைத் தந்து தடுத்தாட் கொண்டிடவும்
வருவாய் அன்பனாய் வந்தருள் ஸ்கந்தகுரோ
யாவர்க்கும் இனியன் நீ யாவர்க்கும் எளியன் நீ ...... 85

யாவர்க்கும் வலியன் நீ யாவர்க்கும் ஆனோய் நீ
உனக்கொரு கோயிலை என் அகத்துள்ளே புனைவேனே
சிவசக்திக் குமரா சரணம் சரணம் ஐயா
அபாயம் தவிர்த்துத் தடுத்தாட் கொண்டருள்வாய்
நிழல்வெயில் நீர்நெருப்பு மண்காற்று வானதிலும் ...... 90

பகைமையை அகற்றி அபயமளித்திடுவீர்
உணர்விலே ஒன்றி என்னை நிர்மலமாக்கிடுவாய்
யானென தற்ற மெய்ஞ் ஞானம் தருள்வாய் நீ
முக்திக்கு வித்தான முருகா கந்தா
சதுர்மறை போற்றும் ஷண்முக நாதா ...... 95

ஆகமம் ஏத்தும் அம்பிகை புதல்வா
ஏழையைக் காக்க நீ வேலேந்தி வந்திடுவாய்
தாயாய்த் தந்தையாய் முருகா தக்கணம் நீ வருவாய்
சக்தியும் சிவனுமாய்ச் சடுதியில் நீ வருவாய்
பரம்பொருளான பாலனே ஸ்கந்தகுரோ ...... 100

ஆதிமூலமே அருவாய் உருவாய் நீ
அடியனைக் காத்திட அறிவாய் வந்தருள்வாய்
உள்ளொளியாய் முருகா உடனே நீ வா வா வா
தேவாதி தேவா சிவகுரோ வா வா வா
வேலாயுதத்துடன் குமரா விரைவில் நீ வந்திடப்பா ...... 105

காண்பன யாவுமாய்க் கண்கண்ட தெய்வமாய்
வேதச் சுடராய் மெய்கண்ட தெய்வமே
மித்தையாம் இவ்வுலகை மித்தையென்று அறிந்திடச்செய்
அபயம் அபயம் கந்தா அபயம் என்று அலறுகின்றேன்
அமைதியை வேண்டி அறுமுகவா வாவென்றேன் ...... 110

உன்துணை வேண்டினேன் உமையவள் குமரா கேள்
அச்சம் அகற்றிடுவாய் அமைதியைத் தந்திடுவாய்
வேண்டியது உன்அருளே அருள்வது உன் கடனேயாம்
உன் அருளாலே உன்தாள் வணங்கிட்டேன்
அட்டமா சித்திகளை அடியனுக்கு அருளிடப்பா ...... 115

அஜபை வழியிலே அசையாமல் இருத்திவிடு
சித்தர்கள் போற்றிடும் ஞானசித்தியும் தந்துவிடு
சிவானந்தத் தேனில் திளைத்திடவே செய்துவிடு
அருள் ஒளிக் காட்சியை அகத்துளே காட்டிவிடு
அறிவை அறிந்திடும் அவ்வருளையும் நீ தந்துவிடு ...... 120

அனுக்கிரகித்திடுவாய் ஆதிகுருநாதா கேள்
ஸ்கந்தகுரு நாதா ஸ்கந்தகுரு நாதா
தத்துவம் மறந்து தன்னையும் நான் மறந்து
நல்லதும் கெட்டதும் நான் என்பதும் மறந்து
பாவ புண்ணியத்தோடு பரலோகம் மறந்திடச்செய் ...... 125

அருள் வெளிவிட்டு இவனை அகலாது இருத்திடுவாய்
அடிமையைக் காத்திடுவாய் ஆறுமுகக் கந்தகுரோ
சித்தியிலே பெரிய ஞானசித்தி நீ அருள
சீக்கிரமே வருவாய் சிவானந்தம் தருவாய்
சிவானந்தம் தந்தருளி சிவசித்தர் ஆக்கிடுவாய் ...... 130

சிவனைப் போல் என்னைச் செய்திடுவது உன் கடனே
சிவசத் குருநாதா சிவசத் குருநாதா
ஸ்கந்த குருநாதா கதறுகிறேன் கேட்டிடுவாய்
தாளினைப் பிடித்தேன் தந்திடு வரம் எனக்கு
திருவருட் சக்தியைத் தந்தாட் கொண்டிடுவாய் ...... 135


[கந்தகுருவின் கவசம் காப்பாற்ற வருகிறது!]

சத்ருப் பகைவர்களை ஷண்முகா ஒழித்திட்டு
கிழக்குத் திசையிலிருந்து க்ருபாகரா காப்பாற்றும்
தென்கிழக்குத் திசையிலிருந்து தீனபந்தோ காப்பாற்றும்
தென்திசையிலும் என்னைத் திருவருளால் காப்பாற்றும்
தென்மேற்கிலும் என்னைத் திறன்வேலால் காப்பாற்றும் ...... 140

மேற்குத் திக்கில் என்னை மால்மருகா ரக்ஷிப்பாய்
வடமேற்கிலும் என்னை மயிலோனே ரக்ஷிப்பாய்
வடக்கில் என்னைக் காப்பாற்ற வந்திடுவீர் சத்குருவாய்
வடகிழக்கில் எனக்காக மயில்மீது வருவீரே
பத்துத் திக்குத் தோறும் எனை பறந்துவந்து ரக்ஷிப்பாய் ...... 145

என் சிகையையும் சிரசினையும் சிவகுரோ ரக்ஷிப்பாய்
நெற்றியும் புருவமும் நினதருள் காக்கட்டும்
புருவங்களுக்கிடையே புருஷோத்தமன் காக்கட்டும்
கண்கள் இரண்டையும் கந்தவேல் காக்கட்டும்
நாசிகள் இரண்டையும் நல்லவேல் காக்கட்டும் ...... 150

செவிகள் இரண்டையும் சேவற்கொடி காக்கட்டும்
கன்னங்கள் இரண்டையும் காங்கேயன் காக்கட்டும்
உதட்டினையும் தான் உமாசுதன் காக்கட்டும்
நாக்கை நன் முருகன் நயமுடன் காக்கட்டும்
பற்களை ஸ்கந்தன் பலம்கொண்டு காக்கட்டும் ...... 155

கழுத்தை ஸ்கந்தன் கைகளால் காக்கட்டும்
தோள்கள் இரண்டையும் தூய வேல் காக்கட்டும்
கைகள் விரல்களைக் கார்த்திகேயன் காக்கட்டும்
மார்பையும் வயிற்றையும் வள்ளிமணாளன் காக்கட்டும்
மனத்தை முருகன்கை மாத்தடிதான் காக்கட்டும் ...... 160

ஹ்ருதயத்தில் ஸ்கந்தன் இனிது நிலைத்திருக்கட்டும்
உதரத்தை யெல்லாம் உமைமைந்தன் காக்கட்டும்
நாபிகுஹ்யம் லிங்கம் நவயுடைக் குதத்தோடு
இடுப்பை முழங்காலை இணையான கால்களையும்
புறங்கால் விரல்களையும் பொருந்தும் உகிர் அனைத்தையுமே ...... 165

உரோமத் துவாரம் எல்லாம் உமைபாலா ரக்ஷிப்பாய்
தோல் ரத்தம் மஜ்ஜையையும் மாம்சமென்பு மேதசையும்
அறுமுகவா காத்திடுவீர் அமரர் தலைவா காத்திடுவீர்
என் அகங்காரமும் அகற்றி அறிவொளியாய் இருந்தும்
முருகா எனைக் காக்க வேல் கொண்டு வந்திடுவீர் ...... 170


முருகனின் மூலமந்திரம் இங்கு உபதேசிக்கப் படுகிறது!
மந்திரம், அதனை சொல்லும் முறை, எத்தனை முறை ஜெபிக்க வேண்டும், அதன் பலன்கள் என்னென்ன என்பதையெல்லாம் விளக்கும் அற்புதப் பகுதி.

மந்திரங்கள் எல்லாம் ஒரு குருமுகமாய்ப் பெறுதல் வேண்டும் என்பது நியதி.ஆனால், இங்கு ஒரு சற்குருவே இதனைச் சொல்லியிருப்பதால், இதனையே முறைப்படி முருகன் சந்நிதியில் வைத்து, அங்கிருந்து ஜெபிக்கத் தொடங்கலாம் எனப் பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். விருப்பமிருப்பின், அவ்வாறே செய்யலாம்.முருகனருள் முழுதுமாய் முன்னிற்கும்! 

பாபத்தைப் பொசுக்கிப் பாரெல்லாம் சிறப்புறவே
ஓம் ஸெளம் சரவணபவ ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் என்றும்
க்லௌம் ஸௌம் நமஹ என்று சேர்த்திடடா நாள்தோறும்
ஓமிருந்து நமஹவரை ஒன்றாகச் சேர்த்திடடா
ஒன்றாகக் கூட்டியுமே உள்ளத்திலே இருத்தி ...... 175

ஒருமனத் தோடு நீ உருவையும் ஏத்திடடா
முருகனின் மூலமிது முழுமனத்தோடு ஏத்திட்டால்
மும்மலம் அகன்றுவிடும் முக்தியுந்தன் கையிலுண்டாம்
முக்தியை வேண்டியுமே எத்திக்கும் செல்ல வேண்டாம்
முருகன் இருப்பிடமே முக்தித் தலம் ஆகுமப்பா ...... 180

ஹ்ருதயத்தில் முருகனை இருத்திவிடு இக்கணமே
இக்கணமே மூலமந்த்ரம் ஏத்திவிடு ஏத்திவிடு
மூலமதை ஏத்துவோர்க்கு காலபயம் இல்லையடா
காலனை நீ ஜயிக்க கந்தனைப் பற்றிடடா
சொன்னபடிச் செய்தால் சுப்ரமண்ய குருநாதன் ...... 185

தண்ணொளிப் பெருஞ்சுடராய் உன்னுள்ளே தானிருப்பான்
ஜகமாயை ஜயித்திடவே செப்பினேன் மூலமுமே
மூலத்தை நீ ஜபித்தே முக்தனுமாகிடடா
அக்ஷர லக்ஷமிதை அன்புடன் ஜபித்துவிடில்
எண்ணிய தெலாம்கிட்டும் எமபய மகன்றோடும் ...... 190

மூவுலகும் பூஜிக்கும் முருகனருள் முன்னிற்கும்
பூவுலகில் இணையற்ற பூஜ்யனுமாவாய் நீ
கோடித்தரம் ஜபித்துக் கோடிகாண வேண்டுமப்பா
கோடிகாணச் சொன்னதை நீ நாடிடுவாய் மனமே
ஜன்மம் கடைத்தேற ஜபித்திடுவாய் கோடியுமே ...... 195

வேதாந்த ரகசியமும் வெளியாகும் உன்னுள்ளே
வேத சூட்சுமத்தை விரைவாகப் பற்றிடலாம்
சுப்ரமண்யகுரு ஜோதியாயுள் தோன்றிடுவான்
அருட் பெரும் ஜோதியான ஆறுமுக ஸ்வாமியுமே
அந்தர் முகமிருந்து ஆட்கொள்வான் சத்தியமாய் ...... 200

சித்தியையும் முக்தியையும் ஸ்கந்தகுரு தந்திடுவான்
நின்னையே நான் வேண்டி நித்தமும் ஏத்துகிறேன்
மெய்யறிவாகக் கந்தா வந்திடுவாய் இவனுளே நீ
வந்திடுவாய் மருவிடுவாய் பகுத்தறிவாகவே நீ
பகுத்தறி வோடிவனைப் பார்த்திடச் செய்திடப்பா ...... 205

பகுத்தறிவான கந்தன் பரங்குன்றில் இருக்கின்றான்
பழனியில் நீயும் பரம்ஜோதி ஆனாய் நீ
பிரம்மனுக்கு அருளியவா ப்ரணவப் பொருளோனே
பிறவா வரமருளி ப்ரம்ம மயமாக்கிடுவாய்
திருச்செந்தூரில் நீ சக்திவேல் தாங்கி விட்டாய் ...... 210

பழமுதிர் சோலையில் நீ பரஞ்ஜோதி மயமானாய்
ஸ்வாமி மலையிலே சிவஸ்வாமிக் கருளிய நீ
குன்றுகள் தோறும் குருவாய் அமர்ந்திட்டோய்
ஸ்கந்தகிரியை நீ சொந்தமாக்கிக் கொண்டனையே
ஸ்கந்த குருநாதா ஸ்கந்தாஸ்ரம ஜோதியே ...... 215

பிறப்பையும் இறப்பையும் பெயர்த்துக் காத்திடுவாய்
பிறவாமை என்கின்ற பெருவரம் நீ தந்திடுவாய்
தத்துவக் குப்பையை மறந்திடச் செய்திடுவாய்
எந்த நினைப்பையும் எரித்து நீ காத்திடுவாய்
ஸ்கந்தா சரணம் ஸ்கந்தா சரணம் ...... 220

சரணம் அடைந்திட்டேன் சடுதியில் வாருமே
சரவண பவனே சரவண பவனே
உன்னருளாலே நான் உயிரோடிருக்கின்றேன்
உயிருக்குயிரான கந்தா உன்னிலென்னைக் கரைத்திடப்பா
என்னில் உன்னைக் காண எனக்கு வரமருள்வாய் ...... 225

சீக்கிரம் வந்து சிவசக்தியும் தந்தருள்வாய்
இடகலை பிங்கலை ஏதும் அறிந்திலேன் நான்
இந்திரியம் அடக்கி இருந்தும் அறிகிலேன் நான்
மனதை அடக்க வழி ஒனறும் அறிந்திலேன் நான்
ஸ்கந்தா உன் திருவடியைப் பற்றினேன் சிக்கெனவே ...... 230

சிக்கெனப் பற்றினேன் செப்பிடுவீர் உபதேசம்
காமக் கசடுகள் யாவையும் களைந்திடுவாய்
சித்த சுத்தியும் ஜபமும் தந்திடுவாய்
நினைப்பு எல்லாம் நின்னையே நினைந்திடச் செய்திடுவாய்
திருமுருகா உன்னைத் திடமுற நினைத்திடவே ...... 235

திருவருள் தந்திடுவாய் திருவருள்தான் பொங்கிடவே
திருவருள் ஒன்றிலே நிலைபெறச் செய்திடுவாய்
நிலைபெறச் செய்திடுவாய் நித்யானந்தமதில்
நித்யானந்தமே நின்னுரு வாகையினால்
அத்வைதானந்தத்தில் இமைப்பொழுது ஆழ்த்திடுவாய் ...... 240 

இடகலை பிங்கலை= முன்னம் சொன்ன ஸோஹம் ஹம்ஸம் எனும் ஹம்ஸ மந்திரம் மூலமுமாக, இடது, வலது நாசி வழியே செல்லும் காற்று!நித்யானந்தம்= உனை உணர்ந்ததால் எனக்கு வரும் இன்பம்.அத்வைதானந்தத்தில்= நீயும் நானும் ஒன்றானோம் எனும் ஆனந்தம்.

திருமுருகன் 108 போற்றி



திருமுருகன் 108 போற்றி


ஓம் அழகா போற்றி
ஓம் அறிவே போற்றி
ஓம் அரன் மகனே போற்றி
ஓம் அயன்மால் மருகா போற்றி

ஓம் சக்திவேலவா சரவணா போற்றி
ஓம் முக்தி அருளும் முருகா போற்றி
ஓம் பன்னிருகை வேலவா போற்றி
ஓம் பவழ வாய் சிரிப்பு பாலகா போற்றி 8

ஓம் ஆறிரு தடந்தோள் போற்றி
ஓம் ஆறெழுத்து மந்த்ரம் போற்றி
ஓம் இடும்பனை வென்றவனே போற்றி
ஓம் இடர் களைவோனே போற்றி

ஓம் உமையவள் மகனே போற்றி
ஓம் உலக நாயகனே போற்றி
ஓம் ஐயனே போற்றி அருளே போற்றி
ஓம் ஐங்கரன் தம்பியே போற்றி 16

ஓம் ஓம்கார சொருபனே போற்றி
ஓம் மூலப்பொருளே குகனே போற்றி
ஓம் ஓதுவார்க் கினியனே போற்றி
ஓம் ஓங்காரத்துள் வளர் ஒளியே போற்றி


ஓம் திருவடி தொழுதிட அருள்வாய் போற்றி
ஓம் குருவடிவான குருவின் உருவே போற்றி
ஓம் பக்தர்கள் போற்றும் பழம் நீ போற்றி
ஓம் சித்தர்கள் வசமான செவ்வேள் போற்றி 24

ஓம் தேவர்கள் சேனைத் தலைவா போற்றி
ஓம் தேவகுஞ்சரி மணாளா போற்றி
ஓம் வெண்நீறணியும் விசாகா போற்றி
ஓம் கண்ணின் மணியே கனியே போற்றி


ஓம் தண்டபாணி எம் தெய்வமே போற்றி
ஓம் குண்டல மொளிரும் சுந்தரா போற்றி
ஓம் வேதப் பொருளே வேந்தே போற்றி
ஓம் அருந்தமிழ் வளர்த்த ஐயா போற்றி 32


ஓம் செந்தில் உறையும் ஸ்கந்த போற்றி
ஓம் பழனி பதிவாழ் பாலக போற்றி
ஓம் இருளிடர் போக்கும் பகலவா போற்றி
ஓம் இன்பமாம் வீடருள் இறைவா போற்றி

ஓம் அன்பின் உருவமே எம்அரசே போற்றி
ஓம் ஔவைக் கருளியவனே போற்றி
ஓம் சேந்தா குறிஞ்சி வேந்தா போற்றி
ஓம் கந்தா கடம்பா கார்த்திகேயா போற்றி 40

ஓம் கருணாகரனே போற்றி
ஓம் கதிர் வேலவனே போற்றி
ஓம் மூலப்பொருளே முருகா போற்றி
ஓம் சூரனுக் கருளிய சேனாபதியே போற்றி

ஓம் குன்று தோறாடும் குமரா போற்றி
ஓம் அறுபடை வீடுடையவா போற்றி
ஓம் கார்த்திகை மைந்தனே போற்றி
ஓம் கந்தசஷ்டி நாயக போற்றி 48


ஓம் இதயக் கோயிலில் இருப்பாய் போற்றி
ஓம் பக்தர்தம் பகை ஒழிப்பவனே போற்றி
ஓம் மகா சேனனே போற்றி
ஓம் மயில் வாகனனே போற்றி


ஓம் வடிவேலுடனே வருவாய் போற்றி
ஓம் அடியார் துயரம் களைவாய் போற்றி
ஓம் வளமான வாழ்வு தருவாய் போற்றி
ஓம் வள்ளி தெய்வானை மணாளா போற்றி 56

ஓம் செஞ்சுடர் மேனிச் செவ்வேள் போற்றி
ஓம் மலைமகட் கிளைய மகனே போற்றி
ஓம் அமிர்தாம் தமிழின் தலைவா போற்றி
ஓம் தமிழர் தம் கருணை மிகு இறைவா போற்றி

ஓம் ஆடும் அயில்வேல் அரசே போற்றி
ஓம் வந்தருள் செய் வடிவேலவா போற்றி
ஓம் கலியுக வரதா கந்தா போற்றி
ஓம் கவலைக் கடலை களைவோய் போற்றி 64

ஓம் தந்தைக்கு மந்த்ரம் உரைத்தவா போற்றி
ஓம் எந்தனுக்கு இரங்கி அருள்வாய் போற்றி
ஓம் சைவம் வளர்த்த சம்பந்தா போற்றி
ஓம் சரவணபவ சண்முகா போற்றி


ஓம் வேடர் தம் கொடி மணாளா போற்றி
ஓம் வனத்தில் வேடனாய் வந்தாய் போற்றி
ஓம் புனத்தினில் ஆண்டியாய் வந்தவா போற்றி
ஓம் தேன்திணைமா நெய்வேத்யா போற்றி 72

ஓம் தெவிட்டா இன்பமே தென்றலே போற்றி
ஓம் தேவாதி தேவனே தெய்வமே போற்றி
ஓம் போகர் நாதனே பொலிவே போற்றி
ஓம் போற்றப் படுவோனே பொருளே போற்றி

ஓம் புண்ணிய மூர்த்தியே வரதா போற்றி
ஓம் யோக சித்தியே அழகே போற்றி
ஓம் பழனியாண்டவனே பாலகா போற்றி
ஓம் தென்பரங் குன்றோனே தேவா போற்றி 80

ஓம் கருணைபொழி போருர்க் கந்தா போற்றி
ஓம் அருணகிரிக் கன்பு அருளினை போற்றி
ஓம் குறிஞ்சி நிலக் கடவுளே போற்றி
ஓம் குறுமுனி தனக்கருள் குருவே போற்றி

ஓம் தணிகாசலம் வுறை சண்முகா போற்றி
ஓம் சிக்கல் மேவிய சிங்காரா போற்றி
ஓம் நக்கீரர்க் கருள் நாயகா போற்றி
ஓம் விராலி மலையுறு வேலவா போற்றி 88

ஓம் திருக்கழுக் குன்றின் செல்வா போற்றி
ஓம் மணம்கமழ் கடம்ப மலையாய் போற்றி
ஓம் குன்றக்குடி அமர் குகனே போற்றி
ஓம் குமரகுரு புகழ் அழகா போற்றி

ஓம் கதிர் காமத்துறை கடவுளே போற்றி
ஓம் துதிபுரி அன்பென் துணையே போற்றி
ஓம் பழனிப் பதிவாழ் பண்டித போற்றி
ஓம் செந்தூர் பதிவாழ் சுந்தரா போற்றி 96

ஓம் மருதாசல மூர்த்தியே மகிழ்வே போற்றி
ஓம் கந்தாஸ்ரமம் நிறை கந்தா போற்றி
ஓம் பழமுதிர்ச் சோலைப் பதியே போற்றி
ஓம் பத்துமலை முத்துக்குமரா போற்றி

ஓம் ஒளவையின் பைந்தமிழ் கேட்டவா போற்றி
ஓம் அருமையின் எளிய அழகே போற்றி
ஓம் இரு மயில் மணந்த ஏறே போற்றி
ஓம் இருள்சேர் இருவினை நீக்குவாய் போற்றி 104

ஓம் நீங்காப் புகழுடை நிமலா போற்றி
ஓம் திருப் புகழ் விருப்புடைத் தேவா போற்றி
ஓம் அருட்பெரும் ஜோதி ஆண்டவா போற்றி
ஓம் போற்றி ...போற்றி ... ஜெய ஜெய வேலவா போற்றி 108

முருகா, ஸ்கந்தா, சண்முகா இன்னல்கள் நீக்கி
நின்னைச்சரணடைவோருக்கு எல்லா நலமும்
வளமும் தந்தருள்வாய் ஆறுபடையப்பா....
குமரா...உன் திருவடி தொழுதனம் போற்றியே.....


தனலாபம், பூமிலாபம், எதிரிகளிடம் வெற்றி,
ரோஹ நிவாரணம், செவ்வாய் தோஷ நிவர்த்தி
திருமணம் போன்றவைகளுக்கு செவ்வாய்க்கிழமை
தோறும் ஆறுமுகத்துடன் உள்ள முருகனை
வள்ளி தெய்வானையுடன் மனதில் உருவகித்து
இந்த போற்றியை பாராயணம் செய்ய வாழ்வில்
வளம் பெறலாம்.