Nov 19, 2014

திருச்சிற்றம்பலம் சிவபுராணம்



திருச்சிற்றம்பலம் சிவபுராணம் 




நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க

இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க
கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க
ஆகம மாகிநின்ற அண்ணிப்பான் தாள்வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க
வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடி வாழ்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்குச் சேயோன்தன் பூங்கழல்கள் வெல்க
கரம்குவிவார் உள் மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க
ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தோன் அடிபோற்றி சிவன்சே வடிபோற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி
மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடிபோற்றி
சீரார் பெருந்துறைநம் தேவன் அடிபோற்றி
ஆராத இன்பம் அருளுமலை போற்றி
சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன்யான்
கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
எண்ணுதற் கெட்டா எழிலார் கழலிறைஞ்சி
விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்
எண்ணிறத் தெல்லை யிலாதானே நின்பெருஞ்சீர்
பொல்லா வினையென் புகழுமாறு ஒன்றறியேன்
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்அசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத்தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்
உய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா என ஓங்கி ஆழ்ந்தஅகன்ற நுண்ணியனே
வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா
பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி
மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே
ஆக்கம் அளவுஇறுதி இல்லாய் அனைத்துலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப்புகுவிப்பாய் நின்தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே
மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே
கறந்தபால் கன்னலோடு நெய்கலந்தாற் போலச்
சிறந்த அடியார் சிந்தனையுள் தேனூறி நின்று
பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை
மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டிப்
புறந்தோல் போர்த்தெங்கும் புழு அழுக்கு மூடி
மலஞ்சோறும் ஒன்பது வாயிற் குடிலை
மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய
விலங்கு மனத்தால் விமலா உனக்குக்
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலந்தன் மேல் வந்தருளி நீள்கழல்கள்கரஅட்டி
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்
தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேன் ஆர் அமுதே சிவபுரனே
பாசமாம் பற்றறத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள் புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப்
பேராது நின்ற பெருங்கருணைப் பேராரே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கிஎன் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே
அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய்ஞ்ஞானத்தால் கொண்டுணர்வார் தம் கருத்தின்
நோக்கரிய நோக்கே நுணுக்கரியநுண்ணுணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப்புண்ணியனே
காக்கும் எம் காவலனே காண்பரிய பேர்ஒளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய்
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனையுள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்குடம்பின் உட்கிடப்ப
ஆற்றேஎம் ஐயா அரனேஓ என்று என்று
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே
நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே
தில்லையுள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே
அல்லற் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித்திருவடிக்கீழ்ச்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து.



திருச்சிற்றம்பலம்







பிரதோஷம் - ஒம் நமசிவாய









Oct 27, 2014

மஹா மிருத்யுஞ்ஜய மந்திரம்


                                           மஹா மிருத்யுஞ்ஜய மந்திரம்


ஓம் த்ரயம்பகம் யஜாமஹே

சுகந்திம் புஷ்டிவர்த்தனம்
உர்வாரு கமிவபந்தனாத்
ம்ருத்தியோர் முஷியமாம்ருதாத்.







Sep 19, 2014

ஒவ்வொரு நட்சதிரத்திர்க்கும் விசேஷ ஸ்தோத்திரம்



ஒவ்வொரு நட்சதிரத்திர்க்கும்  விசேஷ ஸ்தோத்திரம் 





     27 நட்சதிரத்திர்க்கும் தனித்தனியே ஸ்தோத்திரங்கள் உண்டு. இந்த ஸ்தோத்திரத்தை ஒரு நாளைக்கு குறைந்தது 11 முறை முதல் அதிக பட்சம் 27 முறை பாராயணம் செய்து வந்தால் வாழ்வில் நிச்சயம் அணைத்து கஷ்டங்களில் இருந்தும் விடுபடலாம். காலையில் எழுந்து குளித்துவிட்டு உணவு உட்கொள்ளும் முன் இறைவனை மனதில் முழுமையாக நினைத்து முகல் முறை பாராயணம் செய்யவும். பிறகு உங்கள் விருப்பம் போல் இதை எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் செய்யலாம்.
நீங்கள் இந்த ஸ்தோத்திரத்தை எத்தனை முறை பாராயணம் செய்தாலும் அது ஒற்றை படையாக இருக்க வேண்டும். உதாரணம் 1, 3, 5, 7, 9, 11…… என்று இருக்க வேண்டும். பெண்களும் இதை எந்த விதமான தடையும் இல்லாமல் அணைத்து நாட்களிலும் பின்பற்றலாம். ஒரு மண்டலம் தொடர்ந்து செய்து வந்தாலே பல முன்னேற்றங்களை நீங்கள் உங்கள் வாழ்வில் நிச்சயம் உணர்வீர்கள். இதை பாராயணம் செய்யும் போது அந்த அந்த நட்சத்திரத்திற்கு அதிபதியான கடவுளர்களை அர்ச்சனை செய்து வழிபடுவது இன்னும் சிறப்பு.
இந்த ஸ்தோத்திரங்களை நமக்கு அருளியவர் பெரியவர் ஆதிசங்கரர். அவர் நமக்கு அருளிய “ஸ்ரீ சிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா” என்னும் நூலில் இவை குறிப்பிடப்பட்டுள்ளன. அதை உங்களுக்கு நான் சமர்பிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். எல்லாம் வல்ல சிவனே போற்றி...!!!

1. அஸ்வினி
ஸ்ரீமதாத்மனே குணைகஸிந்தவே நம: சிவாய
தாமலேச தூதலோக பந்தவே நம: சிவாய
நாம சோஷிதா நமத் பவாந்தவே நம: சிவாய
பாமரேதர ப்ரதாத பாந்தவே நம: சிவாய

2. பரணி
கால பீதவிப்ரபால பாலதே நம: சிவாய
சூல பின்ன துஷ்ட தக்ஷபாலதே நம: சிவாய
மூல காரணீய கால காலதே நம: சிவாய
பாலயாதுனா தயாலவாலதே நம: சிவாய

3. கிருத்திகை
இஷ்ட வஸ்து முக்யதான ஹேதவே நம: சிவாய
துஷ்ட, தைத்யவம்ச, தூமகேதவே நம: சிவாய
ஸ்ருஷ்டி ரக்ஷணாய தர்ம ஸேதவே நம: சிவாய
அஷ்ட மூர்த்தயே வ்ருஷேந்ர கேதவே நம: சிவாய

4. ரோஹிணி
ஆபதத்ரி பேத டங்க ஹஸ்ததே நம: சிவாய
பாப ஹாரி திவ்ய ஸிந்து மஸ்ததே நம: சிவாய
பாப தாரிணே லஸன்ந மஸ்ததே நம: சிவாய
சாப தோஷ கண்டன ப்ரசஸ்ததே நம: சிவாய

5. ம்ருகசீர்ஷம்
வ்யோம கேச திவ்ய ஹவ்ய ரூபதே நம: சிவாய
ஹேம மேதி னீ தரேந்ர சாப தே நம: சிவாய
நாம மாத்ர தக்த ஸர்வ பாபதே நம: சிவாய
காமிநைக தாந ஹ்ருத்துராபதே நம: சிவாய

6. திருவாதிரை
ப்ரம்ம மஸ்தகாவலீ நிபத்ததே நம: சிவாய
ஜிம் ஹகேந்ர குண்டல ப்ரஸித்ததே நம: சிவாய
ப்ரம்மணே ப்ரணீத வேத பந்ததே நம: சிவாய
ஜிம்ஹ கால தேஹ தத்த பந்ததே நம: சிவாய

7. புனர்பூசம்
காமநாசனாய சுத்த கர்மணே நம: சிவாய
ஸாம கான ஜாயமான சர்மணேநம: சிவாய
ஹேம காந்தி சாக சக்ய வர்மணே நம: சிவாய
ஸாம ஜாஸூராங்க லப்த சர்மணே நம: சிவாய

8. பூசம்
ஜன்ம ம்ருத்யு கோரதுக்க ஹாரிணே நம: சிவாய
சின்மயை கரூப தேஹ தாரிணே நம: சிவாய
மன்மனோ ரதாவ பூர்த்தி காரிணே நம: சிவாய
மன்மனோகதாய காம வைரிணே நம: சிவாய

9. ஆயில்யம்
யக்ஷராஜ பந்தவே தயாளவே நம: சிவாய
ரக்ஷ பாணி சோபி காஞ்ச நாளவே நம: சிவாய
பக்ஷிராஜ வாஹ ஹ்ருச் சயாளவே நம: சிவாய
அக்ஷி பால வேத பூத தாளவே நம: சிவாய

10. மகம்
தக்ஷ ஹஸ்த நிஷ்ட ஜ்õத வேதஸே நம: சிவாய
அக்ஷராத்மனே நமத்பி டௌ ஜஸே நம சிவாய
தீஷித ப்ரகாசிதாத்ம தேஜஸே நம: சிவாய
உக்ஷராஜ வாஹதே ஸதாம் கதே நம: சிவாய

11. பூரம்
ராஜிதாசலேந்ர ஸாநு வாஸிநே நம: சிவாய
ராஜமான நித்ய மந்த ஹாஸினே நம: சிவாய
ராஜகோர காவ தம்ஸ பாஸினே நம: சிவாய
ராஜராஜ மித்ரதா ப்ரகாசினே நம: சிவாய

12. உத்திரம்
தீனமான வாளி காம தேனவே நம: சிவாய
ஸூந பாண தாஹ த்ருக் க்ருசானவே நம: சிவாய
ஸ்வாநு ராக பக்த ரத்ன ஸானவே நம: சிவாய
தானவாந்தகார சண்ட பானவே நம: சிவாய

13. ஹஸ்தம்
ஸர்வ மங்களா குசாக்ர சாயினே நம: சிவாய
ஸர்வ தேவதா கணாத் சாயினே நம: சிவாய
பூர்வ தேவ நாச ஸம்விதாயினே நம: சிவாய
ஸர்வ மன் மனோஜ பங்க தாயினே நம: சிவாய

14. சித்திரை
ஸ்தோக பக்திதோபி பக்த போஷிணே நம: சிவாய
மாகரந்த ஸாரவர்ஷ பாஸிணே நம: சிவாய
ஏகபில்வ தானதோபி தோஷிணே நம: சிவாய
நைகஜன்ம பாப ஜால சோஷிணே நம: சிவாய

15. ஸ்வாதி
ஸர்வ ஜீவரக்ஷணைக் சீலினே நம: சிவாய
பார்வதீ ப்ரியாய பக்த பாலினே நம: சிவாய
துர்விதக்த தைத்ய ஸைன்ய தாரிணே நம: சிவாய
சர்வரீச தாரிணே கபாலினே நம: சிவாய

16. விசாகம்
பாஹிமாமுமா மனோக்ஞ தேஹதே நம: சிவாய
தேஹிமே பரம் ஸிதாத்ரி தேஹதே நம: சிவாய
மோஹி தர்ஷி காமினீ ஸமுஹதே நம: சிவாய
ஸ்வேஹித ப்ரஸன்ன காம தோஹதே நம: சிவாய

17. அனுஷம்
மங்களப் ரதாயகோ துரங்கதே நம: சிவாய
கங்கையா தரங்கி தோத்த மாங்காதே நம: சிவாய
ஸங்கத ப்ரவிருத்த வைரி பங்கதே நம: சிவாய
அங்கஜாரயே கரே குரங்கதே நம: சிவாய

18. கேட்டை
ஈஹித க்ஷண ப்ரதாந ஹேதவே நம: சிவாய
அக்னி பால ச்வேத உக்ஷ கேதவே நம: சிவாய
தேஹ காந்தி தூத ரௌப்ய தாதவே நம: சிவாய
கேஹ துக்க புஜ்ஜ தூமகேதவே நம: சிவாய

19. மூலம்
திரியக்ஷ தீன ஸத்க்ருபா கடாக்ஷதே நம: சிவாய
தக்ஷ ஸப்த தந்து நாச தக்ஷதே நம: சிவாய
ருக்ஷராஜ பானு பாவகாக்ஷதே நம: சிவாய
ரக்ஷமாம் ப்ரஸன்ன மாத்ர ரக்ஷதே நம: சிவாய

20. பூராடம்
அந்ரி பாணயே சிவம் கராயதே நம: சிவாய
ஸங்கடாத் விதீர்ண கிம்கராயதே நம: சிவாய
பங்க பீஷிதா பயங்கராயதே நம: சிவாய
பங்க ஜாஸனாய சங்கராயதே நம: சிவாய

21. உத்தராடம்
கர்மபாச நாச நீலகண்டதே நம: சிவாய
சர்ம தாய நர்ய பஸ்ம கண்டதே நம: சிவாய
நிர்ம மர்ஷி ஸேவி தோப கண்டதே நம: சிவாய
குர்மஹே நதீர்ந மத்விகுண்டதே நம: சிவாய

22. திருவோணம்
விஷ்ட பாதிபாய நம்ர விஷ்ணவே நம: சிவாய
சிஷ்ட விப்ர ஹ்ருத்குஹா வரிஷ்ணவே நம: சிவாய
இஷ்ட வஸ்து நித்ய துஷ்ட ஜிஷ்ணவே நம: சிவாய
கஷ்ட நாசனாய லோக ஜிஷ்ணவே நம: சிவாய

23. அவிட்டம்
அப்ரமேய திவ்ய ஸூப்ரபாவதே நம: சிவாய
ஸத்ப்ரபன்ன ரக்ஷண ஸ்வபாவதே நம: சிவாய
ஸ்வப்ரகாச நிஸ்துலா நுபாவதே நம: சிவாய
விப்ர டிம்ப தர்சிதார்த்ர பாவதே நம: சிவாய

24. சதயம்
ஸேவ காயமே ம்ருட ப்ரஸாதினே நம: சிவாய
பவ்ய லப்ய தாவக ப்ரஸீத தே நம: சிவாய
பாவ காக்ஷ தேவ பூஜ்ய பாததே நம: சிவாய
தாவ காங்க்ரி பக்த தத்த மோத தேநம: சிவாய

25. பூரட்டாதி
புக்தி முக்தி திவ்ய தாய போகினே நம: சிவாய
சக்தி கல்பித ப்ரபஞ்ச பாகினே நம: சிவாய
பக்த ஸங்கடாபஹர யோகினே நம: சிவாய
யுத்த ஸன்மனஸ் ஸரோஜ யோகினே நம: சிவாய

26. உத்தரட்டாதி
அந்த காந்த காய பாப ஹாரிணே நம: சிவாய
சம்தமாய தந்தி சர்ம தாரிணே நம: சிவாய
ஸந்த தாச்ரிவ்யதா விதாரிணே நம: சிவாய
ஜந்து ஜாத நித்ய ஸெளக்ய காரிணே நம: சிவாய

27. ரேவதி
சூலினே நமோ நம: கபாலினே நம: சிவாய
பாலினே விரிஞ்சி துண்ட மாலினே நம: சிவாய
லீலனே விசேஷ முண்ட மாலிநே நம: சிவாய
சீலினே நம ப்ரபுண்ய சாலினே நம: சிவாய

ஆதி சங்கரரின் அருளார் நமக்கு கிட்டிய இந்த நட்சத்திர ஸ்தோத்திரங்களை மனதார ஜபித்து வளம் பெறுவோம். நலம் பெறுவோம்.